Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

கடந்த 2009ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியம் திட்டம்  அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டமானது ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்குது ரத்து செய்யப்பட்டு பணி ஓய்வு பெறுகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும்முறை புதிய ஓய்வூதிய திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அந்த அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக கூறப்பட்டுள்ளது. அதனால் அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை பெறப்பட்டுள்ளது. அத்துடன் இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியது.

அதில், தமிழகத்தில் கடந்த 1968ஆம் வருடம் முதல் அரசு பணியில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் 2004-ஆம் வருடம் முதல் பணியில் இணைபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு மிகவும் எதிரானதாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் இதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |