Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. ஜனவரி 19-ஆம் தேதி போராட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே அரசு மருத்துவர்கள் ஊதியம் உயர்த்தி வழங்க தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதுபற்றி மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு பேசுகையில், கடந்த ஆண்டு முதல் கொரோனா கொரோனாவால் மருத்துவர்கள் இடைவிடாது ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பணிகளின் போது ஏராளமான மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

இருந்தபோதிலும் அரசு மருத்துவர்கள் பயப்படாமல் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை அளித்து வந்தனர். இவ்வாறாக செயல்படும் மருத்துவர்களை கௌரவப்படுத்துவதற்கு பதிலாக இந்தியாவிலேயே மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் தரும் மாநிலமாக தமிழகம் இருந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது. இத்தகைய ஊதிய உயர்வு வழங்குமாறு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், புதிய ஆட்சி வந்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஊதிய உயர்வு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

எனவே தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல் மற்றும் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் வரும் ஜனவரி 19-ஆம் தேதி வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |