அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம், ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை எப்போது செயல்படுத்துவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நேற்று சேலம் மாவட்டத்தில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மண்டல கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜசேகர் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த 10 சதவீத தொகை அரசிடம் தான் உள்ளது. அந்த நிதியை வைத்து அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மு க ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.