Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம்…. ஆசிரியர் சங்கத்தினர் பேரணி…!!!

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று பேரணி நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும், தங்கள் பணிக்கு பின்,  ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக பெற்று வந்தனர். மேலும் ஒரு அரசு ஊழியர் இறப்பிற்குப் பின்னும், அவரது மனைவிக்கு அந்த குறிப்பிட்ட தொகையானது வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஏரளாமானோர் பயன் பெற்றனர்.  இந்நிலையில் ஓய்வு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட நிதி சிக்கலின் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டமானது ரத்து செய்யப்பட்டு, தமிழக அரசால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, ஓய்வூதியம் ,மருத்துவ காப்பீடு இதில் எந்தவித பலன்களும் பணி ஓய்வுக்குப் பின் கிடைக்காது என அறிவித்திருந்தது. இதையடுத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், பழைய ஓய்வூதிய திட்டமானது  செயல்படுத்தப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்று 11 மாதங்கள் ஆகியும் எந்தவித அறிவிப்புகளும் வராத நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகே நேற்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் முத்துசாமி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கல்ஸ் பேசியுள்ளனர்.

மேலும் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பேரணியில் பங்கேற்றனர். மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த நிலையில், தமிழக அரசும்,  ஊழியர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இலட்சக்கணக்கான கையெழுத்துகளைத் திரட்டி, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |