Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு 1,100 கோடி ரூபாய் கடன்…. உலக வங்கி அசத்தல்…!!!

சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்றும் திட்டத்திற்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு 1,100 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையுடன் சேர்த்து மேகாலய மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 296 கோடியை கடனாக வழங்க இருக்கிறது.

உலக வங்கி நிர்வாகம் வங்கியின் செயல் இயக்குனர், கூட்டத்தில் இவற்றிற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வங்கியில் பெரும் கடன் தொகையை கல்வி நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள், குடிநீர் சப்ளை, கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதார வசதிகள் அதிகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, ஆகியவற்றை மேலும் பலப்படுத்த உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |