234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வரும் 7ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 234 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்ய போவதாக அறிவித்திருக்கின்றார். மேலும், நாம் தமிழர் கட்சியின் செயற்பட்டு வரைவை ஆவணமாக வெளியிடப் போகிறேன் என்ற வகையில் சீமான் கருத்தினைத் தெரிவித்துள்ளார் . பாதையை தேடாதே உருவாக்கு என்ற வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயரிய கூற்றுக்கு உயிரூட்டம் விதத்தில் உலகெங்கும் வேர் பரப்பி வாழ்கின்ற மக்கள் இராணுவம் ஆகிய நாம் தமிழர் கட்சி என்ற வகையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மக்கள் இராணுவம் ஆகிய நாம் தமிழர் கட்சிக்கு மகத்தான ஆதரவையும், வாக்குகளையும் மக்கள் வழங்க வேண்டும் . தமிழர்கள் அனைவரும் வழங்கவேண்டும். தமிழின நாகரீகம் தமிழினத்தின் தார்மீக கடமை ஆகிறது என்ற வகையில் குறிப்பிட்டுள்ள சீமான் 234 பேர் இது வரை அனைத்து வேட்பாளரும் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து அறிமுகம் செய்ய இருக்கின்றார். தமிழக அரசியலில் 234 வேட்பாளர்களையும் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து அறிமுகம் செய்த வரலாறு கிடையாது.
மேடையே தாங்குமா ? எனத் தெரியவில்லை. சீமான் 234 வேட்பாளர்களை ஒரே மேடையில் நிறுத்தப் போகிறார் என்ற பொழுது அந்த மேடையில் அந்த அல்ல அந்த அளவுக்கு இடம் இருக்குமா ? என்று கூட தெரியவில்லை. ஆனால் அவர் அறிவித்திருக்கிறார். கடந்த முறை நாடாளுமன்ற தொகுதிக்கு நாற்பது வேட்பாளரையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்த முறை 234 என்ற மிகப்பெரிய எண்ணிக்கையை எப்படி நிறுத்தப் போகிறார் ? என்பதே தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.