அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த பள்ளிகள் மத்திய அரசின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக 25 அரசு மாதிரி பள்ளிகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 150 கோடி நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 8-ம் வகுப்பில் நடத்தப்படும் தேசிய ஊரக திறனாய்வுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.
அதன்பிறகு 10-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை 9-ம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படும் ஊரகத் திறனாய்வு தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையிலும், 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 10-ம் வகுப்பில் நடத்தப்படும் NTSE தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். இப்படி தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் மற்றும் தலை சிறந்த கல்வி நிலையங்களில் அவர்கள் நுழைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அந்தப் பள்ளிகளில் சேர்ந்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.