Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம்….. இனி இப்படித்தான்…. வெளியான புதிய உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் கட்டணம் இல்லாமல் ச் சிகிச்சை பெறவேண்டும் என்ற நோக்கத்தை மையமாக கொண்டு முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமாக ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது இந்த திட்டமானது மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தோடு இணைக்கப்பட்டு விரிவான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தகுதியான நபர்கள் எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மேலும் அதற்கு ஏற்றவாறு திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |