தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக, கொரோன தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த வகையில் தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகள் சுயவிவரக்குறிப்புடன் 14 நாட்கள் பயண விபரங்களை பதிவு செய்ய வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி சான்றிதழை இணைக்க வேண்டும். சுயவிவரக் குறிப்புகளில் தவறான தகவல்களை பதிவு செய்தது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது..