Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9,10,11,12 மாணவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. கடந்த 13ஆம் தேதி கனியாமூரில் பள்ளி மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்த சம்பவ தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சில மாணவர்கள் ஆசிரியர்கள் திட்டியதன் காரணமாக தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவங்கள் அதிகரித்த வருகின்றது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது கட்டாயம் என்று முடிவு எடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர்  “ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் வாரம் ஐந்து நாட்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூக நலத்துறை சார்பிலும், காவல்துறை சார்பிலும் கவுன்சிலிங் வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |