நாடு முழுவதும் ஆயுத பூஜை நேற்று முன் தினமும் விஜயதசமி நேற்றும் கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகை காலம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை வந்ததால் திங்கள்கிழமை என்று ஒரு நாள் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என பலரும் வெள்ளிக்கிழமை இரவே வெளியூர் செல்ல தொடங்கினர் . அதனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து நான்கு நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் ஆறு லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவும் பயணிகளுக்காக 3250 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கும்பகோணம், மதுரை, நெல்லை மற்றும் கோவை போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.