Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும்,  திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி மதுரை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |