சென்னை முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்க உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றிவந்த 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார் .
அதன்படி, சென்னை மாநகர பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஸ்டீபன் திருவண்ணாமலை மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக இருந்த மெசிலரின் எஸ்கோல் திருநெல்வேலி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், சென்னை மாநகர விருகம்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த அகஸ்டின் பால் சுதாகர் சென்னை மாநகர மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், சென்னை அரசு பிரஸ் டிஎஸ்பியாக இருந்த யாகூப் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் கூதுல் பாதுகாப்பு அதிகாரியாகவும், சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்த குமரேசன் சென்னை மாநகர வடக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.