தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் மாதத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருவதால் முதற்கட்டமாக 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பின் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்த கடந்த ஜன 5ஆம் தேதி முதல் ஜன.20ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் கட்டணம் செலுத்தாத காரணத்தால் கால அவகாசத்தை ஜன.31ஆம் தேதி வரை நீட்டித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அத்துடன் இதனை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது