Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆம் தேதி முதல்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவிலும் பரவத்தொடங்கியது. அதனால் தடுப்பூசிகளை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் ஒன்றிய அரசு முடிவெடுத்திருந்தது. முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், இணை நோயுள்ள 60 வயதுக்கும் மேலான முதியோர்களுக்கு ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது என்றும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும், அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Categories

Tech |