பேரிடர் மேலாண்மை துறை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை துறை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “தமிழகத்திலுள்ள அரசு, தனியார் கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், மக்களின் பொது பயன்பாட்டு கட்டிடங்கள், கடற்கரை, அருவிகள், ஏரி, கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் குறித்த போட்டோக்களுடன் கூடிய தகவல்களை பேரிடர் மேலாண்மை துறை செயலியில் டேட்டாபேஸ் வடிவில் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.