Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வண்ணமயமாகும் ரேஷன் கடைகள்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான ரேஷன் கடைகள் பாலடைந்து காட்சியளிக்கின்றன. அது மட்டுமல்லாமல் சரி வர தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.அதனால் மக்கள் ஒருங்கிணைப்புடன் ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை என்ற புதிய முயற்சியை கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தற்போது தொடங்கியுள்ளார்.

அதன் மூலமாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் ரேஷன் கடைகளில் தூய்மை பணி செய்து வண்ணம் பூசுவது போன்ற பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதுமட்டுமல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் மற்றும் கூட்டுறவு சங்க சேவைகள் தொடர்பாக கடை சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு வருகின்றது.

Categories

Tech |