தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் ரேஷன் கார்டு மூலம் மலிவு விலையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ரேஷன் அட்டை ஸ்மார்ட் கார்டாக டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் பொருள்கள் வாங்கும் போது விற்பனை முனைய கருவிகள் மூலம் தங்களது கைரேகையை வைத்து பின்னர் பொருள்களை பெற்று செல்கின்றனர்.
அதேபோல் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களும், தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களும் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கலை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை மக்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் கைரேகை பதிவு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் பிறமாநில ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பணி தற்போது நிறைவு பெற்றுள்ளதால் கைரேகை வைக்கும் முறை மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிற மாநில குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த அறிவிப்பால் பிற மாநிலத்தில் வசிக்கும் தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.