தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் என்று விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஆண்டு முதல் தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. இதனால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. வாரத்திற்கு இரண்டு முறை தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளின் அருகில் எளிமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை 117 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கிராமப்புற மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்வதை கட்டாயமாக்கும் வகையில் தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்கும் விதமாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தமிழக பதிவுத்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சர் பி மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும் பின்னரும் செலுத்தி கொள்ளவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.