நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் பனைவெல்லம் விற்கும் முறை நடைமுறைக்கு வருகிறது.
ஒரு அட்டைக்கு 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் பனைவெல்லம் வாங்க கோரி குடும்ப அட்டைதாரர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.