Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்ய உத்தரவு… டிஜிபி அதிரடி…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல குற்றச் செயல்கள் அதிகமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கொலை, கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதனால் மக்கள் யாரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தினம்தோறும் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் குற்ற பதிவேட்டில் உள்ள ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தவறு செய்யாத ரவுடிகளை குற்றவியல் நடைமுறை சட்டம் 110 பிரிவின் கீழ் பிடித்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்பு ஆஜர் படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் போலி மதுபான விற்பனை குறித்த விசாரணை, இரவு நேர வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |