தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கபடும் 2,774 பேருக்கு மாத ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும், அதற்கான ஊதிய தொகையாக ஐந்து மாதங்களுக்கு ரூ.13.87 கோடி நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில்…. ரூ.10,000 ஊதியம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!
