Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மெட்ரோ ரயில் நிலையங்களில்…. 6 மாதங்களுக்குள்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஏதுமில்லை. இதுகுறித்து ஐகோர்ட்டில் வைஷ்ணவி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகள் ஏதும் இல்லை. பல மெட்ரோ ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் முறையாக இயங்குவது இல்லை. இதனால் பயணிகள் நீண்ட உயரத்திலுள்ள படிக்கட்டுகளில் ஏறி இறங்க சிரமப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

அதனைதொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடியும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகள் இல்லை. இது குறித்து மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில், சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் 6 வாரங்களில் செய்து கொடுக்கப்படும். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கட்டப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை நீதிபதி 6 வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

Categories

Tech |