Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் டிசம்பர் 27-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் லாரி உரிமையாளர்களின் தினசரி வாழ்வில் பல சிக்கல்கள் உடங்கியுள்ளன. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் வேலைநிறுத்தத்தில் குடிநீர், பெட்ரோல், டீசல் மற்றும் பால் போன்ற அத்யாவசிய தேவை லாரிகள் மட்டும் இயங்கும். பிற மாநிலங்களிலிருந்து வரும் லாரிகள் தமிழகத்திற்குள் நுழையாது. மேலும் இதில் ஆட்டோ மற்றும் வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கம் பங்கேற்க உள்ளதால் தமிழகம் முழுவதும் முடங்க வாய்ப்புள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |