தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் சித்த மருத்துவமனை முகாம் தொடங்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் சித்த மருத்துவமனை முகாம் தொடங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அனைவருக்கும் கபசுர குடிநீர் கொடுக்க கூறியுள்ளோம். கடந்த சில நாட்களில் தடுப்பூசி வீணாவது 5-சதவீதமாக குறைந்துள்ளது.