Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. திடீர் எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது கடந்த இரண்டு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 13 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 க்கும் குறைவாக உறுதி செய்யப்பட்டு வந்தது.

ஆனால் ஜூன் மாதம் முதல் பாதிப்பு எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது பாதிப்பு உறுதி செய்யப்படுவது 1.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோணா பரவலும் 5 மாவட்டங்களில் இருந்து 13 மாவட்டங்கள் ஆக அதிகரித்துள்ளது. இது இப்படியே சென்றால் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |