Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்ததால் முதலில் அனைத்து கல்வி நிலையங்களும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் தொடர்ந்து ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வந்தனர். இதையடுத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அப்போது அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த காரணத்தால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ம் தேதி 1- 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றது. அதன்பின் பிப்ரவரி 16ம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து சீரான முறையில் சென்று வருகிறது. இதற்கிடையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விரைவில் பாடங்களை முடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் பெற்றோர்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது 1-8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த முறையும் தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்புகள் குறைவு தான். இதனால் முடிக்க வேண்டிய பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தி முடிக்கலாம். ஆகவே பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகளை நடத்தலாம். நடப்பு கல்வியாண்டு நிறைவடைய இன்னும் 2 மாதம் இருக்கிறது. அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை புத்துணர்ச்சியுடன் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக 1-8ம் வகுப்புகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான அரசின் நிலைப்பாடு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |