Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்?…. முதல்வர் அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ஜனவரி 10-ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது, மேலும் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் சுழற்றி முறை வகுப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கு இருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இது குறித்த முடிவுகள் ஆலோசனைக்கு பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |