Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு பிறகு…. போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தீவிரமடைவதால் தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜனவரி 16 அன்று முழு ஊரடங்கினை அரசு அறிவித்துள்ளது.

அதனால் பொங்கலுக்கு பின்பு 16.01.2022 முதல் 18.01.2022 வரை இயக்குவதாக இருந்த சிறப்பு பேருந்துகள் 17.01.2022 முதல் 19.01.2022 வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும் 16.01.2022 அன்று முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப இரண்டு தினங்களில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.பொங்கல் முடிந்து 15ம் தேதி அன்று தொலைதூரங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் அனைத்தும், பயணிகள் புறநகர் ரயில் மூலம் தங்களுடைய இருப்பிடம் செல்வதற்கு ஏதுவாக தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் வழியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |