Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு…. பலே அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்….!!!!

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனவர்களின் ஒழுங்கினங்களால் வருவாய் இழப்பு மற்றும் அவ பெயர் ஏற்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடக்கூடாது,  பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஒரு பயணி நின்றாலும் கூட பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர் பேருந்தை குறித்தபேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை போக்குவரத்துக் கழகம் பிறப்பித்துள்ளது.

Categories

Tech |