Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்… அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம். அந்தத் திட்டம் தற்போது வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியிலும் அது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நகர பேருந்துகளுக்கு “பிங்க்” நிற பூச போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. இதன் முன்னோட்டமாக சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக கூட்டத்தில் மூன்று பேருந்துகளுக்கு பிங்க் நிறம் பூசப்பட்டு இயக்கத் தொடங்கியுள்ளன. இதைத்தொடர்ந்து அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளிலும் பிங்க் நிறம் பூசப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |