Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இனி…. போக்குவரத்துத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னைமாநகர பேருந்துகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டது. அதில் “பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 500 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவரசகால அழைப்பு பொத்தான் வாயிலாக தகவல் தெரிவிக்கலாம்” என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பேருந்துக்குள் இந்த ஒலி ஏற்படும்போது அங்குள்ள நிலைமையை நடத்துனர் கண்காணித்து, அதற்கேற்ப காவல்துறை மற்றும் மருத்துவ உதவி (தேவைப்படும் பட்சத்தில்) கைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு புகாரை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார் தெரிவிக்கப்பட்டவுடன் கட்டுப்பாட்டு மையத்தில் இருப்பவர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |