சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டனர். அதில், தமிழகத்தில் இன்றைய கொரோனா இறப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும். மார்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444.
மருத்துவர் வடிவேலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்தனர். இன்றைய கொரோனா அறிவிப்பு செய்தியில் விடுபட்ட 444 இறப்புகள் சேர்க்கப்படும் என்று தகவல் தெரிவித்தார். இது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றது.