தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் மிக முக்கியமான ஒன்றுதான் மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்.
இந்த திட்டம் இது அனைத்து பெண்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. பெண்கள் மட்டுமே பயணிப்பதால் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான பயணமாக இருக்கிறது என கூறப்படுகின்றது. இந்நிலையில் மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மகளிரிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.
ஒரு பயணி நின்றாலும் அவருக்காக பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும். வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்யவும், பேருந்தில் இடம் இல்லை என்று ஏற வரும் பயணிகளை இறக்கி விடவும் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.