Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தடை…… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என சமூகபாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கயிறுகளை அணிந்து தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் பல ஜாதி குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவெளியின் போதும், விளையாட்டு நேரத்திலும், பள்ளி நேரத்திலும் அனைவரோடு கலந்து பழகாமல் தனித்து இருக்கும் சூழல் நிலவுவதாக தெரிய வந்தது. எனவே மாணவர்கள் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் தனி கவளம் செலுத்தி மாணவர்களுக்கு இதனால் ஏற்படும் விளைவுகளை காலை பிரார்த்தனைகளுக்கு கூடும் போது எடுத்துக் கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இது குறித்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கையில் டாட்டூ குத்தக் கூடாது கம்மல், செயின், காப்பு அணியக் கூடாது, பிறந்தநாளில் சீருடையில்தான் வர வேண்டும் போன் கொண்டு வரக்கூடாது சரியான நேரத்திற்கு வர வேண்டும், தலைக்கு எண்ணெய் தேய்த்து வர வேண்டும் உள்ளிட்ட 20 நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |