Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. 14, 17,18 வயது மாணவர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் ஐந்து நாட்களுக்கு பிறகு தற்போது மாணவர்களுக்கு வழக்கம் போல் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. குறுவட்ட அளவில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 30 வரை, வருவாய் மாவட்ட அளவில் செப்டம்பர் 2 முதல் அக்டோபர் 31 வரை, மாநில அளவில் நவம்பர் 10 முதல் 14 வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

Categories

Tech |