தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்தது. அதனால் மாணவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் https://www.tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்து வந்த நடைமுறையை ரத்து செய்யப்படுவதாகவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. இனி இந்த https://www.tnvelaivaaippu.gov.in/
இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்புக்கு10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.