தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. இதையடுத்து கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இந்நிலையில் 10,12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்றுமுதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்குச் சென்றும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்றும் தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 4-ஆம் தேதி கடைசி நாள். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Categories
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. ஜூலை 4-ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
