Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, பதிவு, ஜாதி, பாலின விகிதம், தனிப்பட்ட தரவு, தேர்வுகள், உடல்நலம் போன்ற தரவுகளையும் ஆன்லைனில் பதிவு செய்ய ‘எமிஸ்’ என்னும் டிஜிட்டல் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தினசரி இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால்’எமிஸ்’ பதிவின்போது ஏற்படும் சர்வர் பிரச்சினை, நெட்வொர்க் கோளாறால் ஆசிரியர்களுக்கு கல்விப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் எமிஸ் ஆப் பதிவு முறையால் ஆசிரியர்களுக்கு அதிக நேரம் விரயம் ஆகாது. வகுப்புகளுக்கு வந்துள்ள மாணவர்களைத் தவிர வராத மாணவர்களுக்கு அப்சென்ட் என்பதை கிளிக் செய்து கொள்ளலாம். அதேபோல் மாணவர்கள் ஜாதியை பதிவு செய்ய வேண்டும் என்றாலும் அவர்கள் கட்டாயம் சாதியைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பது இல்லை. விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஜாதியை ஆசிரியரிடம்  தெரிவிக்கலாம். விருப்பம் இல்லாத பட்சத்தில் எனக்கு விருப்பமில்லை என்பதை ஆசிரியரிடம் கூறிவிடலாம்.

இந்நிலையில் மாணவ, மாணவியரை சங்கடப் படுத்தும் வகையிலான மாதவிடாய் மற்றும் சாதி தொடர்பான தகவல்கள் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களிடம் நூற்றுக்கணக்கான தகவல்களை பெற்று “எமில்” இணையதளத்தில் பதிவிட ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் ஜாதி, மாதவிடாய் போன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்ததால் பெரும் சர்ச்சை உருவானது. இதையடுத்து இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |