Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் இனி…. கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….

தமிழகத்தில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முன் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. அலகு தேர்வுகளை நடத்துவது அனைத்தும் மொபைல் வழியாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்களை படித்து வருவதால் அவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்படுவதாகவும் கல்வியாளர்கள் எச்சரித்தனர்.

தற்போது மீண்டும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் பள்ளியில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. பள்ளிக்கு செல்போன் எடுத்து வருவதை கண்டறிந்து தடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஆசிரியர்கள் வகுப்பறையில் போனை சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும் எனவும் வகுப்பறை தவிர மற்ற நேரங்களில், தேவையான விஷயத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |