தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in-ல் பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் பள்ளிகளில் இன்று முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுத் தேர்வுக்கான தற்காலிக சான்றிதழ் மட்டுமே ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன் படி இன்று முதல் அக்டோபர் 1ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.