Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய இயலும். ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க தனி குழு அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |