தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தற்போது அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரையில் உள்ள ஒன்பது நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி இரண்டாம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.