Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு…. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு…  அதிரடி காட்டிய ரெய்டு …!!

தமிழகத்தில் 75 நாட்களில் அரசு அலுவலகங்ளில் நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவோரை கண்டறிந்து கைது செய்யக்கூடிய நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 75 நாட்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  127 அரசு அலுவலகங்களில் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் 6 கோடியே 96 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  அதேபோல புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளில் 62 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூபாய் 37 லட்சத்துக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சோதனையில்,  7.232 கிலோ தங்கம், 9. 843 கிலோ வெள்ளி, 10. 52 காரட் வைரம் ஆகியவை சோதனையில் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. நேற்று கூட சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனுடைய வீட்டில் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதில் 17 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட இருக்கின்றன. அந்தச் சொத்து ஆவணங்கள் மட்டுமல்லாமல் மற்ற அரசு அதிகாரிகளுடைய வங்கி கணக்குகள் அனைத்தும் கைப்பற்றபட்டுள்ளது. இவை அனைத்தையும் ஆய்வு செய்யக்கூடிய பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

Categories

Tech |