Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவில் இனி அதிரடி மாற்றம்?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!

தமிழக அரசின் நிதி நிலையை உயர்த்தும் நோக்கில் பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி காரணமாக அதிகமான பொருளாதார சிக்கல்களை சந்தித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது அரசின் நிதி நிலையை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பத்திரப்பதிவு கட்டணத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறியதாவது, சொத்து விற்பனை பதிவில் தற்போதைய நிலவரப்படி 7 சதவீதம் முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் 4 சதவீதம் என்ற நிலையில் வசூலிக்கப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் சொத்து மதிப்பில் 1 அல்லது 2 சதவீதம் கட்டணம் நிர்ணயித்தாலும் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பத்திர பதிவுத்துறை கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |