Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகளில்…. பாதுகாப்பு தீவிரம்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் சுமார் 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாலை 5-6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |