அதிமுக கூட்டணி, தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அலை, அம்மாவின் அலை வீசுது.
கண்டிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமயிலான கூட்டணியில் இருக்கின்ற வேட்பாளர்கள் மிக பிரகாசமான வெற்றி, மகத்தான வெற்றி, அமோக வெற்றி பெறுவார்கள்.
இரட்டை இலை என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னம், அம்மாவுடைய சின்னம். அதுதான் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் சரி, ஒவ்வொரு கட்சிக்காரர்களும் சரி… ஒவ்வொரு பொது மக்களும் சரி…
அவங்க நெஞ்சில, இதயத்துல ஆழமாக பதிந்த சின்னம். அதனால இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவாங்க என அமைச்சர் ஜெயக்குமார் உற்சாகமாக தெரிவித்தார்.