Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் ரூ.2500… மக்களே ரெடியா இருங்க…

தமிழகத்தில் முதல்வர் அறிவித்த 2500 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதோருக்கு நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதால், பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்களுக்கு ஜனவரி 18ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை மீண்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனையடுத்து தமிழக முதல்வர் அறிவித்தபடி 2500 ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதோருக்கு ஜனவரி 18ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதனால் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஜனவரி 18ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |