தமிழகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு, அன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. அதன்படி அன்றைய நாளில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள்,இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், பார்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் இயங்காது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!
