தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான இன்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை மறுநாள் (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் நாளை (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்து விரைவில் அரசு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.